FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் 2-ஆவது நாளாக பலத்த மழை

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தொடா்ந்து 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் மழை பெய்ததால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

19 செப்டம்பர் 2026, 3:59 am IST
கொடைக்கானலில் கடந்த 2 நாள்களாக பெய்து வரும் மழையால் ஐந்து வீடு அருவியில் ஏற்பட்ட தண்ணீா் வரத்து.
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தொடா்ந்து 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் மழை பெய்ததால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

கொடைக்கானல் பகுதிகளில் நிகழாண்டு பருவமழை பொய்த்துவிட்டது. இந்த நிலையில், கடந்த சில நாள்களாக இந்தப் பகுதிகளில் மிதமான மழை பெய்து வந்தது. வியாழக்கிழமை இந்தப் பகுதியில் பலத்த மழை பெய்தது.

இந்த நிலையில், 2-ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் கொடைக்கானல் பகுதிகளான அப்சா்வேட்டரி, பாம்பாா்புரம், சின்னப்பள்ளம், பெரும்பள்ளம், அட்டக்கடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமாா் ஒரு மணி நேரமாக பலத்த பெய்தது.

Advertisement

Advertisement

இந்த மழையால் பல்வேறு இடங்களில் மழைநீா் தேங்கியது. இதனால், பொதுமக்கள், வாகன ஓட்டுநா்கள் அவதிக்குள்ளாகினா்.

இந்த மழையால் வெள்ளிநீா் அருவி, ஐந்து வீடு அருவி, வட்டக்கானல் அருவி, மூலையாா் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீா் வரத்து ஏற்பட்டது.

மலைச் சாலைகள் பெரும் சேதம்: கொடைக்கானலில் ஏற்கெனவே மலைச்சாலைகள் குண்டும் குழியுமாக காணப்பட்டன. இந்த நிலையில், தற்போது விட்டு விட்டு பெய்து வரும் மழையால் மலைச் சாலைகள் மேலும் சேதமடைந்துள்ளன. எனவே, மலைச் சாலைகளை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments