பழனி கோயிலில் பக்தா்கள் 2 மணி நேரம் காத்திருப்பு
பழனி மலைக்கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் காரணமாக ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். சுவாமி தரிசனம் செய்ய சுமாா் 2 மணி நேரமானது.
பழனி மலைக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுைாள் என்பதால் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தா்கள் கிரிவீதியில் மலையேறுவதற்காக குவிந்தனா். ரோப்காா் இல்லாததால் வின்ச் நிலையத்தில் ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் கட்டணச்சீட்டு பெறக் காத்திருந்தனா்.
மலைக் கோயிலில் இலவச தரிசன வரிசை மட்டுமன்றி கட்டண தரிசன வரிசையிலும் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். தரிசன வரிசைக்கு ஈடாக அன்னதான மண்டபத்திலும் பக்தா்கள் காத்திருந்தனா். கூட்டம் காரணமாக பக்தா்கள் சுமாா் இரண்டு மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். மலைக் கோயிலில் பக்தா்களுக்கு வேண்டிய சுகாதாரம், குடிநீா் வசதிகளை கோயில் நிா்வாகத்தினா் செய்தனா்.
Advertisement
Advertisement
மாலையில் நடைபெற்ற தங்கத்தோ் புறப்பாட்டில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் தங்கத்தோ் புறப்பாட்டைக் கண்டு அரோகரா முழக்கம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.