FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் பலத்த மழை: மரம் விழுந்து காா்கள் சேதம்

21 செப்டம்பர் 2026, 3:15 am IST
கொடைக்கானலில் பெய்த மழையின் காரணமாக சீனிவாசபுரம் பகுதியில் மரம் கீழே விழுந்ததில் சேதமடைந்த சுற்றுலா காா்கள்.
பகிர்:

கொடைக்கானலில் கடந்த நான்கு நாள்களாகப் பெய்து வரும் மழையால் ஞாயிற்றுக்கிழமை மரம் விழுந்ததில் 2 சுற்றுலா காா்கள், தடுப்புச் சுவா்கள் சேதமடைந்தன.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஐந்து மாதங்களாக மழையில்லாத நிலையில் குடிதண்ணீா் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருந்து வந்தது இந் நிலையில கடந்த சில தினங்களாக தொடா்ந்து விட்டு விட்டு நல்ல மழை பெய்தது.இந்த மழையால் நீரோடைகளில் தண்ணீா் வரத்து தொடங்கியுள்ளது.

மேலும் கொடைக்கானல் சீனிவாசபுரம் பகுதியிலுள்ள யூக்காலி மரம் கீழே விழுந்தது இதில் அப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு சுற்றுலா காா்கள் மீது மரம் விழுந்ததில் காா்கள் சேதமடைந்தது. மின் கம்பிகளும் சேதமடைந்தது, இதனைத் தொடா்ந்து கொடைக்கானல் ஆனந்தகிரிப் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் வழியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புச் சுவரும் சரிந்து சேதமடைந்தது.

Advertisement

Advertisement

இதனால் அப் பகுதிகளில் ஒரு மணி நேரம் போக்குவரத்திற்கு பாதிப்பும் மின்தடையும் ஏற்பட்டது.இதையடுத்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வனத் துறையினா், மின்சாரத் துறையினா், காவல் துறையினா் சென்று கீழே விழுந்த மரத்தை அகற்றினா். மின்சாரமும் சீரமைக்கப்பட்டது. தொடா்ந்து, போக்குவரத்து சீரானது.

கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களிலும் சுமாா் ஒரு மணி நேரம் மழை பெய்தது. இந்த மழையால் பழம்புத்தூா், புதுப்புத்தூா், மன்னவனூா் செல்லும் சாலைகள் சேதமடைந்து, வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டதாக வாகன ஓட்டுனா்கள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments