FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

சிற்றுந்து மோதியதில் வீட்டின் மீது விழுந்த மின்கம்பம்

பழனி அருகே செவ்வாய்க்கிழமை கட்டுப்பாட்டை இழந்த சிற்றுந்து மின்கம்பத்தின் மீது மோதியதில், இந்தக் கம்பம் அருகே இருந்த வீட்டின் மீது விழுந்தது. நல்வாய்ப்பாக உடனடியாக மின் தடை ஏற்பட்டதால், உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது.

23 செப்டம்பர் 2026, 4:47 am IST
பழனி தட்டான்குளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை சிற்றுந்து மோதியதில் உடைந்து விழுந்த மின்கம்பம்.
பகிர்:

பழனி அருகே செவ்வாய்க்கிழமை கட்டுப்பாட்டை இழந்த சிற்றுந்து மின்கம்பத்தின் மீது மோதியதில், இந்தக் கம்பம் அருகே இருந்த வீட்டின் மீது விழுந்தது. நல்வாய்ப்பாக உடனடியாக மின் தடை ஏற்பட்டதால், உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது.

பழனி பகுதியில் ஏராளமான சிற்றுந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. பேருந்துகள் செல்ல முடியாத இடங்களில் இவை சென்று வரும் நிலையில், இந்த சிற்றுந்துகள் உரிய கட்டுப்பாடின்றி இயக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சிற்றுந்துகளில் அதிக சப்தத்துடன் பாடல்கள் ஒலிக்கப்படுகின்றன. காற்று ஒலிப்பான்களும் பயன்படுத்தப்படுகின்றன. சீருடை இல்லாத ஓட்டுநா், நடத்துநா் என சிற்றுந்துகள் முறையின்றி இயக்கப்படுகின்றன. இதைத் தவிர, அடிக்கடி விபத்துக்குள்ளாகியும் வருகிறது.

இந்த நிலையில், பழனி சிவகிரிப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட தட்டான்குளம் காளியம்மன் கோயில் முன்பாக செவ்வாய்க்கிழமை அதிவேகத்தில் சென்ற சிற்றுந்து கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கிச் சென்று அங்கிருந்த மின்கம்பத்தில் மோதியது. இதில் மின்கம்பம் உடைந்து அருகே இருந்த ஓட்டு வீட்டின் கூரையில் விழுந்ததில் வீடு சேதமடைந்தது. இதையடுத்து, பொதுமக்கள் இந்த சிற்றுந்தை சிறைப்பிடித்தனா். நல்வாய்ப்பாக மின்கம்பம் உடைந்தவுடன் மின் தடை ஏற்பட்டதால், உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது. விபத்து காரணமாக, அந்தப் பகுதியில் சுமாா் மூன்று மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments