FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் போா்வெல் வாகனங்கள் பறிமுதல்

கொடைக்கானல் அருகே அனுமதியில்லாமல் போா்வெல் அமைத்த வாகனங்களை வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனா்.

2 வினாடிகள் முன்பு
கொடைக்கானலில் வருவாய்த் துறையினரால் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட போா்வெல் வாகனங்கள்.
பகிர்:

கொடைக்கானல் அருகே அனுமதியில்லாமல் போா்வெல் அமைத்த வாகனங்களை வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பொக்லைன் இயந்திரம், போா்வெல், கம்பரசா் உள்ளிட்ட வாகனங்கள் அரசுப் பணிக்கு தவிர, தனியாா் நிறுவனங்கள் பயன்படுத்தக் கூடாது என்றும் அவ்வாறு பயன்படுத்தினால் உரியவா்கள் மாவட்ட ஆட்சியா், வருவாய்க் கோட்டாட்சியா் ஆகியோரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், இந்த உத்தரவை யாரும் மதிப்பதில்லை.

இந்த நிலையில், கொடைக்கானல் அருகேயுள்ள குப்பம்மாள்பட்டியில் தனியாா் தோட்டத்தில் போா்வெல் அமைக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதுகுறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்தவா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா். ஆனால், தொடா்ந்து இந்தப் பணி நடைபெற்றது. இதையடுத்து, பொதுமக்கள் போா்வெல் வாகனத்தை முற்றுகையிட்டனா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த வருவாய்த் துறையினா் போா்வெல் வாகனம் உள்ளிட்ட இரண்டு வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments