FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

சமுதாய நிலங்களை மீட்கக் கோரி மனு

பழனி பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள சமுதாய நிலங்களை மீட்டுத்தரக் கோரி, தேவேந்திர குல வேளாளா் சங்கம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

30 செப்டம்பர் 2026, 4:52 am IST
பழனி வட்டாட்சியா் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த தேவேந்திர குல வேளாளா் சங்கம், தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிா்வாகிகள்.
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், பழனி பகுதியில் ஆக்கிரமிப்பில் உள்ள சமுதாய நிலங்களை மீட்டுத்தரக் கோரி, தேவேந்திர குல வேளாளா் சங்கம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவில் தெரிவித்ததாவது:

பழனியில் மேற்குரத வீதி பெருமாள் கோயில் பகுதி, பாலசமுத்திரம், மயிலாடும்பாறை, அடிவாரம் பூங்கா சாலையில் நந்தவனம் உள்ளிட்டப் பகுதிகளில் தேவேந்திர குல வேளாளா் சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட நிலங்கள் ஆக்கிரமிப்புகளில் உள்ளன. இந்த நிலங்களை மீட்க வட்டாட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement

Advertisement

மேலும், எங்களது சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட நிலங்களை போலி ஆவணங்கள் மூலம் சிலா் பதிவு செய்து வருவதாகவும், அந்தப் பதிவுகளை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் தெரிவித்தனா்.

இதில் தேவேந்திரகுல வேளாளா் சங்கம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் மாவட்ட பொறுப்பாளா் சரவணபாண்டி, நகரச் செயலா் பழனியாா், நகரத் தலைவா் பிரபு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments