அட்டாக் பாண்டி ஜாமீன் மனு: விசாரணை ஒத்திவைப்பு
நில அபகரிப்பு வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி அட்டாக் பாண்டி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை மதுரை மாவட்ட நீதிமன்றம் மார்ச் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
நில அபகரிப்பு வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி அட்டாக் பாண்டி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை மதுரை மாவட்ட நீதிமன்றம் மார்ச் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
தி.மு.க. பிரமுகர் பொட்டுசுரேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அட்டாக்பாண்டி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அட்டாக் பாண்டி மீது ஏற்கெனவே மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் நில அபகரிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி அட்டாக் பாண்டி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி சிவகாமசுந்தரி முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு குற்றவியல் வழக்குரைஞர் ஆஜராகவில்லை. உதவி வழக்குரைஞர் ராமசாமி ஆஜரானார். பின்னர் இந்த வழக்கை மார்ச் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.