FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

10 ஆயிரம் பற்களை அகற்றி மருத்துவர் சாதனை: லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் பல் சிகிச்சைப் பிரிவு துறைத் தலைவர் ஜிப்ரீல் ஓய்சுல் , நோய்களால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரம் பற்களை அகற்றி, அதை சேகரித்து லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் பல் சிகிச்சைப் பிரிவு துறைத் தலைவர் ஜிப்ரீல் ஓய்சுல் , நோய்களால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரம் பற்களை அகற்றி, அதை சேகரித்து லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

  இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை அவர் தெரிவித்தது: ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 6ஆம் தேதி பல் மருத்துவ தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, பல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், 2011 மார்ச் 6-இல் சாதனை முயற்சி தொடங்கப்பட்டது.

  அதன்படி, இதுவரை நோய் பாதிக்கப்பட்ட 10 ஆயிரம் பற்கள் நோயாளிகளிடம் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. 2016 லிம்கா புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

Advertisement

Advertisement

மேலும், இந்திய சாதனைப் புத்தகம், ஆசிய சாதனைப் புத்தகத்திலும் இச்சாதனை இடம்பெற்றுள்ளது.

  பற்கள் பாதுகாப்பில் போதுமான விழிப்புணர்வு இல்லை. இந்தியர்கள் சிறுவயதில் இருந்து பால் உட்கொள்வதால் கால்சியம் பற்றாக்குறை இல்லை. இதனால், பற்சொத்தை நோய் இந்தியர்களுக்கு வராது. ஈறு சார்ந்த நோய்களால் மட்டுமே பற்களை இழக்கின்றனர்.

 7 வயது வரையிலான குழுந்தைகளுக்கு பெற்றோரே பல் துலக்கி விடவேண்டும். 3 மாதங்களுக்கு ஒருமுறை அனைவரும் பல் துலக்கியை மாற்றவேண்டும். கடின வகை பிரஷ்களை பயன்படுத்தக் கூடாது. ஆண்டுக்கு இருமுறை பல் சோதனை மேற்கொள்ளவேண்டும்.

இந்த வழிமுறைகளால் பற்களை பாதுகாக்க முடியும். தொடக்க நிலையிலேயே மருத்துவரிடம் சென்றுவிட்டால். பற்களை பிடுங்குவதில் இருந்து குணப்படுத்தி விடலாம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments