FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

உசிலம்பட்டியில் குடிநீர் விநியோகம் செய்யக்கோரி சாலை மறியல்

உசிலம்பட்டியில்   குடிநீர் சீராக   விநியோகம் செய்யக்கோரி புதன்கிழமை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 7:44 am IST
பகிர்:

உசிலம்பட்டியில்   குடிநீர் சீராக   விநியோகம் செய்யக்கோரி புதன்கிழமை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 உசிலம்பட்டி கிழப்புதூர் 14வது வார்டுக்கு  சில நாள்களாக  குடிநீர் சீராக விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் இப்பகுதி மக்கள் குடிநீர் தட்டுப்பாடால் அவதிக்குள்ளாயினர்.   
இதுகுறித்து பொதுமக்கள் புகார் அளித்தும் நகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் உசிலம்பட்டி -மதுரை  மெயின் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர்  மற்றும் நகராட்சி அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குடிநீர்  சீராக  வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்  என்று அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.
முற்றுகை போராட்டம்: உசிலம்பட்டி அருகேயுள்ள வி.பெருமாள்பட்டி, ஒத்தப்பட்டி, முப்பப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு கடந்த 6 மாத காலமாக குடிநீர் சீராக வழங்கப்படவில்லை. குடிநீர் வழங்க  நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்து  பா.ஜ.க. ஒன்றிய செயலர் தீபன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட பெண்கள், உசிலம்பட்டி  கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கஜேந்திரன், ஒன்றிய ஆணையாளர்கள் பாலகிருஷ்ணன், இளங்கோ உள்ளிட்ட அதிகாரிகள்  பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  ஒருவாரத்தில் குழாய்கள் சரிசெய்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், அதுவரைக்கும் டிராக்டரில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments