வேலம்மாள் மருத்துவக் கல்லூரியில் தாய்ப்பால் வார வினாடி- வினா
மதுரை அனுப்பானடி வேலம்மாள் மருத்துவக் கல்லூரியில் தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு புதன்கிழமை மாணவர்களுக்கான வினாடி-வினாப் போட்டிகள் நடைபெற்றன.
மதுரை அனுப்பானடி வேலம்மாள் மருத்துவக் கல்லூரியில் தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு புதன்கிழமை மாணவர்களுக்கான வினாடி-வினாப் போட்டிகள் நடைபெற்றன.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரம் உலக தாய்ப்பால் வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையடுத்து வேலம்மாள் மருத்துவக் கல்லூரியில் தாய்ப் பாலின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் மருத்துவம் சார்ந்த மாணவ, மாணவியருக்கான வினாடி வினாப் போட்டிகள் நடத்தப்பட்டன.
கல்லூரி அளவில் ஆறு குழுக்களாக மாணவ, மாணவியர் பிரிந்து போட்டியில் பங்கேற்றனர். இதில் வென்ற மாணவர் பாலமுரளிகிருஷ்ணா, பூஜாஸ்வேதா, பிரியதர்ஷினி ஆகியோருக்கு குழந்தைகள் நலப்பிரிவு டாக்டர் சுந்தரபாண்டியன் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
வினாடி வினா போட்டிகள் மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சியில் குழந்தைகள் நல சிகிச்சைப் பிரிவைச் சேர்ந்த டாக்டர்கள் நடராஜரத்தினம், ஜெயபாலாஜி, கார்த்திக், ஜெனிஷா, முகமது அசாருதீன், திவ்யா ஆகியோர் கலந்துகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.