அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி, டிராக்டர் பறிமுதல்
உசிலம்பட்டி அருகே புதன்கிழமை அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி மற்றும் டிராக்டரை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.
உசிலம்பட்டி அருகே புதன்கிழமை அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிப்பர் லாரி மற்றும் டிராக்டரை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம், எழுமலை வாசிமலையான் கோயிலருகில் வருவாய் ஆய்வாளர் வீரமுருகன் மற்றும் வருவாய்த்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த பகுதியில் வந்த டிப்பர் லாரி, மற்றும் டிராக்டரை மறித்து சோதனை செய்த போது உரிய அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து டிப்பர் லாரி மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்து பேரையூர் வட்டாட்சியர் அலுவலகம் கொண்டு சென்றனர். இது குறித்து உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.