"தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும்'
தமிழக மீனவர் பிரச்னைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
தமிழக மீனவர் பிரச்னைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
மதுரையில் இருந்து புதன்கிழமை சென்னை சென்ற அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியது : இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை யாழ்ப்பாண நீதிமன்றம் அரசுடமை ஆக்கியுள்ளது. இதற்கு முன்பும் பலமுறை இதுபோல நடந்துள்ளது. இது குறித்து மத்திய அரசும், தமிழக அரசும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இப்பிரச்னைக்கு மத்திய, மாநில அரசுகள் நிரந்தர தீர்வுகாண வேண்டும்.
மீனவர்கள் வட்டிக்கு கடன் வாங்கி பல லட்சம் மதிப்பில் படகுகள் வாங்குகின்றனர். அந்த படகுகள் இல்லாத நிலையில் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.