FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சாலை மறியல்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 55 பேர் கைது

மதுரையில் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 55 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:

மதுரையில் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 55 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை, பாஜக தேசியச்செயலர் 
ஹெச்.ராஜா அவதூறாக பேசியதாகவும், ஹெச்.ராஜா மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
இதன் ஒரு பகுதியாக பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள கட்டபொம்மன் சிலை முன்பாக கட்சியின் மேற்கு மாவட்ட செயலர் கதிரவன் தலைமையில் கட்சியினர் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீஸார் விடுதலை சிறுத்தைகளை கலைந்து போகுமாறு கூறினர். ஆனால் கட்சியினர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்து மறியலை தொடர்ந்தனர்.
 இதனால் போலீஸார் அவர்களை அப்புறப்படுத்த முயன்றபோது இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 55 பேரை போலீஸார் கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments