FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

தேசிய நீச்சல் போட்டிக்கு மதுரை மாணவ, மாணவியர் 5 பேர் தேர்வு

தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்கு மதுரை பள்ளிகளைச்  சேர்ந்த 5 மாணவ, மாணவியர் தேர்வாகியுள்ளனர். 

Updated On : 7 ஜூன் 2018, 8:15 am IST
பகிர்:

தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்கு மதுரை பள்ளிகளைச்  சேர்ந்த 5 மாணவ, மாணவியர் தேர்வாகியுள்ளனர். 
 தமிழக நீச்சல் கழகம் சார்பில் சென்னையில் மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் கடந்த 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை நடைபெற்றன. இதில் மதுரை மாவட்ட நீச்சல் கழகத்தைச் சேர்ந்த 7 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அவர்களில் தனி நபர்களாகவும், குழுப் போட்டிகளிலும் பங்கேற்று மொத்தம் 21 பதக்கங்களைப் பெற்றுள்ளனர். 
 போட்டியில் பங்கேற்றவர்களில் செல்வப்பிரசன்னா, ஆடவர் பிரிவு 1-இல் 100 மீட்டர் ப்ரீ ஸ்டைலில் தங்கம், அதே பிரிவில் 50 மீட்டர், 200 மீட்டரில் வெள்ளிப் பதக்கங்களையும் பெற்றுள்ளார். விகாஷ்,  பிரிவு 1 -இல் 200 மீட்டர் ப்ரீ ஸ்டைலில் தங்கம், அதே பிரிவில் 100 மீட்டரில் வெள்ளி, 100 மீட்டர் பிளே பிரிவில் வெள்ளி, 50 மீட்டர் ப்ரீ ஸ்டைலில் வெண்கலம், 50 மீட்டர் பிளேயில் வெண்கலம் என 5 பதக்கங்களைப் பெற்றுள்ளார்.
 பிரிவு 2 -இல் குணபாலன், 200 மீட்டர் ப்ரீ ஸ்டைலில் தங்கம், 100 மீட்டர் ப்ரீஸ் டைலில் வெண்கலம் மற்றும் 100 மீட்டர் பிளேயில் வெண்கலம் பதக்கங்களையும் பெற்றுள்ளார். 
 பெண்கள் பிரிவில் முகில்வாணிகா, 100 மீட்டர் ப்ளையில் வெள்ளி, 50 மீட்டர் பிளேயில் வெண்கலம், 200 மீட்டர் பிளேயில் வெண்கலம் பதக்கங்களைப் பெற்றுள்ளார். பிரிவு 4-இல் ரோஷிணி 200 மீட்டர் ஐஎம் பிரிவில் தங்கம், 50 மீட்டர் பேக்ஸ்ட்ரோக்கில் வெள்ளி, 50 மீட்டர் ப்ரீ ஸ்டைலில் வெள்ளி பதக்கங்களைப் பெற்றுள்ளார். 
 மதுரை வீரர்கள் குழுவாக தொடர் நீச்சலிலும் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களையும் பெற்றுள்ளனர். மொத்தத்தில் 4 தங்கம், 9 வெள்ளி, 8 வெண்கலம் என 21 பதக்கங்களைப் பெற்றுள்ளனர். அவர்களில் செல்வப்பிரசன்னா, விகாஷ், குணபாலன், முகில்வாணிகா, ரோஷினி ஆகியோர் வரும் 29, 30 ஆகிய தேதிகளில் மகாராஷ்டிர மாநிலம் புனேவில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கத் தகுதி பெற்றுள்ளனர்.
 போட்டிகளில் வென்ற மாணவ, மாணவியரைதமிழ்நாடு நீச்சல் சங்க துணைத் தலைவர் ஸ்டாலின்ஆரோக்கியராஜ்,  மதுரை மாவட்ட நீச்சல் கழகச் செயலர் கண்ணன், துணைச் செயலர் ஜீவா, பயிற்சியாளர் பாஸ்கரன் ஆகியோர் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments