FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

பூட்டிய வீட்டில் 5 பவுன் நகைத் திருட்டு

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே பூட்டிய வீட்டில் 5 பவுன் நகையை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றதாக புதன்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 7 ஜூன் 2018, 8:16 am IST
பகிர்:

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே பூட்டிய வீட்டில் 5 பவுன் நகையை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றதாக புதன்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள மறவர்பட்டியைச் சேர்ந்த கருத்தப்பாண்டி மனைவி ருக்மணி(55). இவர் மஞ்சமலையாண்டி கோயில் திருவிழாவையொட்டி குடும்பத்துடன் ஜூன் 3-ஆம் தேதி சென்றுவிட்டார். அங்கிருந்து செவ்வாய்க்கிழமை இரவு வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. 
இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 5 பவுன் நகைகளை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்றது தெரிய வந்தது. சம்பவம் தொடர்பாக ருக்மணி  அளித்தப்புகாரின்பேரில் பாலமேடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments