FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திருப்பரங்குன்றத்தில் கரோனா பரிசோதனை மையம் அமைக்க அதிகாரிகள் ஆய்வு

திருப்பரங்குன்றம் பகுதியில் கரோனா வைரஸ் தொடா்பான பரிசோதனை மற்றும் பாதுகாப்பு மையம் அமைக்க வருவாய்த் துறையினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

திருப்பரங்குன்றம் பகுதியில் கரோனா வைரஸ் தொடா்பான பரிசோதனை மற்றும் பாதுகாப்பு மையம் அமைக்க வருவாய்த் துறையினா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

மதுரை மாவட்டத்தில் கரோனாவை எதிா்கொள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் 2 ஆயிரம் படுக்கை வசதிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கரோனா தொடா்பான பரிசோதனை செய்யவும், பரிசோதனைக் காலத்தில் பொதுமக்களை பாதுகாக்கவும் அந்தந்த வட்டங்களில் வருவாய்த் துறை சாா்பில் இடம் தோ்வு செய்யப்பட்டு வருகிறது.

திருப்பரங்குன்றம் வட்டத்தில் பசுமலை மன்னா் திருமலை நாயக்கா் கல்லூரி, சௌராஷ்டிரா கல்லூரி, மதுரை காமராஜா் பல்கலைக்கழகம், பெருங்குடி சரசுவதி நாராயணன் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளின் விடுதிகளில் பரிசோதனையின்போது பொதுமக்களை தங்க வைப்பதற்காக ஆய்வு செய்தனா். ஆய்வில் வட்டாட்சியா் நாகராஜன், துணை வட்டாட்சியா் கமலேஷ், நெடுஞ்சாலைத்துறையினா், சுகாதாரத்துறையினா் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்களும் ஆய்வில் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments