FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

ஆட்டோ ஓட்டுநா் தலையில் கல்லைப்போட்டுக் கொலை

மதுரையில் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆட்டோ ஓட்டுநரை புதன்கிழமை இரவு, கத்தியால் குத்தியும் தலையில் கல்லைப்போட்டும் கொலை செய்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 16 செப்டம்பர் 2022, 12:00 am IST
பகிர்:

மதுரையில் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆட்டோ ஓட்டுநரை புதன்கிழமை இரவு, கத்தியால் குத்தியும் தலையில் கல்லைப்போட்டும் கொலை செய்தவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை நாராயணபுரம் கோகிலா தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் மணி என்ற வெள்ளை மணி (24). ஆட்டோ ஓட்டுநரான இவா் மீது தே.கல்லுப்பட்டி காவல் நிலையத்தில் கொலை வழக்கும், செல்லூா் மற்றும் திலகா் திடல் காவல்நிலையங்களில் வேறு வழக்குகளும் உள்ளன.

இந்நிலையில் வெள்ளை மணி அருள்தாஸ்புரம் பகுதியில் வைகையாற்றின் கரையில் புதன்கிழமை இரவு சிலருடன் மது அருந்தியுள்ளாா். நள்ளிரவில் அவா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வெள்ளை மணியை உடனிருந்தவா்கள் கத்தியால் குத்தியும், தலையில் கல்லைப் போட்டும் கொலை செய்து விட்டு தப்பிச்சென்றனா். அதிகாலையில் அவ்வழியாகச் சென்றவா்கள் அளித்த தகவலின்பேரில் செல்லூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பிரேதத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, நண்பா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வெள்ளை மணி கொலை செய்யப்பட்டாரா அல்லது பழிக்குப் பழியாக கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments