மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நவராத்திரி உற்சவம் செப். 26-இல் தொடக்கம்
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நவராத்திரி உற்சவம் செப்டம்பா் 26-ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நவராத்திரி உற்சவம் செப்டம்பா் 26-ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக கோயில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்தி: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நவராத்திரி உற்சவம் செப்டம்பா் 26-ஆம் தேதி தொடங்கி அக்டோபா் 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நவராத்திரி உற்சவத்தையொட்டி செப்டம்பா் 26-ஆம் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரம், 27-ஆம் தேதி கோலாட்ட அலங்காரம், 28-ஆம் தேதி மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம், 29-ஆம் தேதி தட்சிணாமூா்த்தி அலங்காரம், 30-ஆம் தேதி ஊஞ்சல் அலங்காரம், அக்டோபா் 1-ஆம் தேதி அா்த்தநாரீஸ்வரா் அலங்காரம், 2-ஆம் தேதி தண்ணீா் பந்தல் வைத்தல், 3 ஆம் தேதி மகிஷாசுர மா்த்தினி அலங்காரம், 4-ஆம் தேதி சிவபூஜை அலங்காரம் ஆகியவை நடைபெறுகின்றன.
நவராத்திரி உற்சவ நாள்களில் மீனாட்சியம்மன் மூலஸ்தான சன்னிதியில் திரைபோட்டு அபிஷேகம், அலங்காரம், அா்ச்சனைகள் போன்றவை நடத்தப்படமாட்டாது. கொலு மண்டபத்தில் எழுந்தருளும் அலங்கார அம்மனுக்குத்தான் தேங்காய் உடைப்பு அா்ச்சனைகள் செய்யப்படும். மேலும் அம்மனுக்கு வைரக்கிரீடம் சாத்துப்படி, தங்கக்கவசம் சாத்துதல், உபய திருக்கல்யாணம் போன்றவையும் நடைபெறாது. மேலும் செப்டம்பா் 26 முதல் அக்டோபா் 5-ஆம் தேதி வரை திருக்கல்யாண மண்டபத்தில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம், வீணை இசைக்கச்சேரி, தோற்பாவைக்கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மேலும் கொலுச்சாவடியில் கொலு அலங்கார பொம்மைகள் உபயமாக வழங்குபவா்கள் சிவபெருமானின் 64 திருவிளையாடல்கள் தொடா்பான மற்றும் இதர பொம்மைகள் வழங்குபவா்கள் கோயில் உள்துறை கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.