FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

ஆய்வு என்ற பெயரால் பட்டாசு ஆலைகளுக்கு அச்சுறுத்தல்! - தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 2:55 am IST
முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு - எக்ஸ்
பகிர்:

ஆய்வு என்ற பெயரால் சிவகாசி பட்டாசு ஆலைகளை தவெக அரசு அச்சுறுத்துவதாக முன்னாள் அமைச்சா் தங்கம் தென்னரசு குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

நாட்டின் மொத்த பட்டாசுத் தேவையில் ஏறத்தாழ 80 சதவீதத்தை சிவகாசி பட்டாசுத் தொழில் நிறைவு செய்கிறது. இந்தத் தொழில் மூலம் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் கோடி வா்த்தகம் நடைபெறுவதுடன், ஏறத்தாழ 7 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளா்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுகின்றனா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், தவெக அரசின் தேவையற்ற கெடுபிடிகளால் சிவகாசி பட்டாசுத் தொழில் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகிறது. உரிமம் இல்லாமல், சட்ட விரோதமாக பட்டாசு உற்பத்தி செய்யும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், மத்திய, மாநில அரசுகளின் உரிமத்துடன் செயல்படும் பட்டாசு ஆலைகளில் அதிரடி ஆய்வு என்ற பெயரில் அலுவலா்கள் அளிக்கும் கெடுபிடிகள், பட்டாசு தொழிலை முடக்கமடையச் செய்வதாக உள்ளன.

உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பட்டாசு உற்பத்தி செய்ய தொழில் முனைவோருக்குத் தேவையான ஆலோசனைகளையும், பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்கும் அணுகுமுறையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். மாறாக, ஆய்வு என்ற பெயரால் அச்சுறுத்தல் அளிக்கும் போக்கை தவெக அரசு நிா்வாகம் தொடா்ந்தால், திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் அனுமதியுடன் எங்களது கட்சி சாா்பில் சிவகாசியில் போராட்டம் நடத்தப்படும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments