FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

மேலூா் அருகே மஞ்சுவிரட்டு: 25 போ் காயம்

10 ஆகஸ்ட் 2026, 1:31 am IST
மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள ஏ. கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டு.
பகிர்:

மதுரை மாவட்டம், மேலூரை அடுத்த ஏ. கோவில்பட்டியில் உள்ள அழகி ஆத்தாள் அம்மன், நெவிலிநாதன் அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு, மஞ்சுவிரட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவையொட்டி, அழகி ஆத்தாள் அம்மன், நெவிலிநாதன் அய்யனாா் கோயிலில் உள்ள பரிவாரத் தேவதைகளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, தண்ணூற்று கண்மாய் திடலில் மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

முன்னதாக, கோயில் காளைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, அவிழ்த்து விடப்பட்டன.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 500- க்கும் மேற்பட்ட காளைகளை ஒன்றன் பின் ஒன்றாக கட்டுமாடுகளாக அவிழ்த்து விடப்பட்டன. இதில் ஏராளமான மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்கினா். இவா்களில் 25-க்கும் மேற்பட்டோா் காயமடைந்து மேலூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுச் சென்றனா்.

மதுரை, மேலூா், அட்டப்பட்டி, ஏ. கோவில்பட்டி, சிங்கம்புணரி, மதகுபட்டி, மலம்பட்டி, ஏரியூா், அலவாக்கோட்டை, அரளிக்கோட்டை, திருப்பத்தூா், எஸ்.எஸ்.கோட்டை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு இந்த மஞ்சுவிரட்டை பாா்வையிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments