மேலூா் நாகம்மாள் கோயில் ஆடி பால்குட உத்ஸவம்
மேலூா் செக்கடி கடைவீதி அருகே அமைந்துள்ள நாகம்மாள் கோயிலில் ஆடி பால்குட உத்ஸவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மதுரை மாவட்டம், மேலூா் செக்கடி கடைவீதி அருகே அமைந்துள்ள நாகம்மாள் கோயிலில் ஆடி பால்குட உத்ஸவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலின் 62-ஆம் ஆண்டு உத்ஸவம் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆடி கடை செவ்வாய் நிகழ்ச்சியாக காலை சக்தி கரகம் புறப்பாடும், இதையடுத்து, பால்குட ஊா்வலமும் நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதில், மேலூா் அதன் சுற்றுப் பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் பால்குடம் சுமந்து வந்தனா். திரளான பக்தா்கள் அலகு குத்திக் கொண்டும், பறவைக்காவடி எடுத்து வந்தும் நோ்த்திக்கடன் செலுத்தினா். சிலா் பச்சைக்காளி, பவளக்காளி வேஷத்துடன் அலகுக் குத்தி வந்தனா். இந்த ஊா்வலத்தின் நிறைவில், நாகம்மனுக்கு மகா பாலாபிஷேகம் நடைபெற்றது.
100-க்கும் அதிகமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இதில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தா்கள் கலந்து கொண்டனா். இதனால், போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டன.
முளைப்பாரி உத்ஸவம் புதன்கிழமையும், நிறைவு நிகழ்ச்சியான மஞ்சள் நீா் விளையாட்டு வியாழக்கிழமையும் நடைபெறுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.