FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: ஆசிரியா் கைது

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியாா் பள்ளி ஆசிரியரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

21 ஆகஸ்ட் 2026, 1:26 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியாா் பள்ளி ஆசிரியரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரையில் உள்ள தனியாா் பள்ளியில் பயின்ற மாணவிகள் சிலா், அந்தப் பள்ளியில் பணியாற்றும் இயற்பியல் ஆசிரியா் ராஜ்குமாா் (37) தங்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் புகாா் அளித்தனா்.

இதுதொடா்பாக ஆட்சியரின் உத்தரவின் பேரில், ஊமச்சிகுளம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். விசாரணையில், திண்டுக்கல்லைச் சோ்ந்த ஆசிரியா் ராஜ்குமாா் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments