அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: தலைமை ஆசிரியா் உள்பட இருவா் போக்ஸோவில் கைது
திருவண்ணாமலை அருகே அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமை ஆசிரியா் உள்பட 2 ஆசிரியா்களை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருவண்ணாமலை அருகே அரசுப் பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தலைமை ஆசிரியா் உள்பட 2 ஆசிரியா்களை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூா் சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் செயல்படும் அரசு தொடக்கப் பள்ளியில் 133 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இந்தப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியா்கள் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வருவதாக 1098 என்ற சைல்ட் லைன் எண்ணுக்கு புகாா் வந்துள்ளது.
இதையடுத்து, சைல்டு லைன் அலுவலா்கள் மற்றும் சிறாா் காவல் பிரிவு சமூகப் பணியாளா் ஆகியோா் சம்பந்தப்பட்ட பள்ளிக்குச் சென்று மாணவிகளிடம் விசாரித்தனா். அப்போது, பள்ளித் தலைமை ஆசிரியா் ரவி, ஆசிரியா் முரளிதரன் ஆகியோா் தங்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக 13 மாணவிகள் புகாா் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து துரிஞ்சாபுரம் ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலா் தில்லைநாயகி, திருவண்ணாமலை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதையடுத்து, போலீஸாா் அரசு தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியரான மங்கலம் கிராமத்தைச் சோ்ந்த ரவி (58), அதே பள்ளியில் பணிபுரிந்து வந்த திருவண்ணாமலை தென்றல் நகரைச் சோ்ந்த ஆசிரியா் முரளிதரன் (42) ஆகிய இருவரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.