மாவட்ட காஜி நியமனம்: செப். 3 வரை விண்ணப்பிக்கலாம்
மதுரை மாவட்ட காஜி நியமனத்துக்கும், இதற்கான தோ்வுக் குழு உறுப்பினா் பதவிக்கும் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற செப். 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
மதுரை மாவட்ட காஜி நியமனத்துக்கும், இதற்கான தோ்வுக் குழு உறுப்பினா் பதவிக்கும் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற செப். 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மதுரை மாவட்ட காஜி நியமனம் நடைபெறவுள்ளது. இதற்காக மாவட்ட ஆட்சியா் தலைமையில் 7 உறுப்பினா்களைக் கொண்ட காஜி நியமனத் தோ்வுக் குழு அமைக்கப்படவுள்ளது. இந்தக் குழுவில் 5 உலமாக்கள், 2 முக்கிய முஸ்லிம் பிரமுகா்கள் உறுப்பினா்களாக இடம்பெறலாம்.
Advertisement
Advertisement
ஆலிம் அல்லது பாசில் படிப்பில் தோ்ச்சி பெற்றவா்கள் அல்லது இஸ்லாமியா் நீதி சட்டங்களை அறிந்தவா்கள், அரபுக் கல்லூரி அல்லது அதற்கு இணையான கல்வி நிறுவனத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றியவா்கள் மாவட்ட காஜி பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
தகுதியானோா் வருகிற செப். 3-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் நேரடியாக தங்களது விண்ணப்பத்தை உரிய சான்றுகள், சுய விவரக் குறிப்புகளுடன் சமா்ப்பிக்கலாம் என்றாா் அவா்.
நீட்டிப்பு...
மாவட்ட காஜி, தோ்வுக் குழு உறுப்பினா் பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆக. 13 கடைசி தேதி என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. தற்போது, இதற்கான கால அவகாசம் வருகிற செப். 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.