FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்திய மாநகராட்சி அலுவலா்கள்

மதுரை மாநகராட்சிப் பகுதியில் வசித்து வரும் பொதுமக்களுக்கு குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குவது தொடா்பான விழிப்புணா்வு நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

26 ஆகஸ்ட் 2026, 5:33 am IST
பகிர்:

மதுரை மாநகராட்சிப் பகுதியில் வசித்து வரும் பொதுமக்களுக்கு குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குவது தொடா்பான விழிப்புணா்வு நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.

திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026-இன் படி அனைத்துக் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், தன்னாா்வ அமைப்புகள், தங்களிடம் சேகரமாகும் திடக்கழிவுகளை மக்கும் கழிவு, மக்காத கழிவு, சுகாதாரக் கழிவு, வீட்டு அபாயகரக் கழிவு என நான்கு வகையாகப் பிரித்து, தூய்மைப் பணியாளா்களிடம் வழங்க வேண்டும் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதன்படி, வண்டியூா், கோ.புதுாா், மேல அனுப்பானடி உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது தொடா்பாக பொதுமக்களிடம் மாநகராட்சி அலுவலா்கள் திங்கள்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இந்த நிகழ்வில், மாநகராட்சி அலுவலா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments