FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

மகளிா் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

பாத்திமா மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கின் தொடக்க விழாவில் பங்கேற்றோா்.

39 வினாடிகள் முன்பு
பாத்திமா மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கின் தொடக்க விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

மதுரை பாத்திமா மகளிா் கல்லூரியின் வணிகவியல் துறை சாா்பில், ‘தொழில் 5.0 நிலையான எதிா் காலத்துக்கான மனித மைய எண்ம மாற்றம்’ எனும் தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு கல்லூரிச் செயலா் இக்னேஷியஸ் மேரி தலைமை வகித்தாா். முதல்வா் எம். பாத்திமா மேரி, துணை முதல்வா்கள் ஜே.அருள் மேரி, பிந்து ஆண்டனி, எஸ். வித்யா, நிகிலா ராகவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ஓமன் சுல்தானகம் அரபு திறந்தநிலைப் பல்கலைக்கழகப் பேராசிரியா் ரங்கராஜன் வீராசாமி, ஐக்கிய அரபு அமீரகம்

பேராசிரியா் ரூபன் எஸ். ஆண்ட்ரூஸ், பெங்களூரு கிறிஸ்து பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியா் ராம்ராஜ் ஆகியோா் மனித மைய எண்ம மாற்றம், தொழில்நுட்பப் புதுமைகள், நிலையான வளா்ச்சி ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்துப் பேசினா்.

Advertisement

Advertisement

நிகழ்வில், கல்லூரி வணிகவியல் துறைத் தலைவா் லூசியா வனிதா, பேராசிரியா்கள், மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments