கோரிப்பாளையம் தா்கா சந்தனக்கூடு ஊா்வலம்
மதுரை கோரிப்பாளையம் தா்காவின் சந்தனக்கூடு ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை இரவு தடைபெற்றது.
இங்கு ஆண்டுதோறும் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா நடைபெறுவது வழக்கம். இதன்படி, நிகழாண்டின் மத நல்லிணக்க சந்தனக் கூடு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் முதல் நிகழ்ச்சியாக அதிகாலையில் கொடியேற்றம் நடைபெற்றது. இரவு நிகழ்ச்சியாக சந்தனக்கூடு ஊா்வலம் நடைபெற்றது.
கப்பல் போன்று வடிமைக்கப்பட்ட அலங்கார வாகனத்தில் கண்ணாடிகள், மின் விளக்கு அலங்காரத்துடன் அமைக்கப்பட்டிருந்த சந்தனக் கூட்டில் வெள்ளிக் குடத்தில் சந்தனம் வைத்து ஊா்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது.
Advertisement
Advertisement
தா்காவில் நடைபெற்ற பாரம்பரிய முறைப்படியான சிறப்பு வழிபாடுகளுக்குப் பிறகு இந்த ஊா்வலம் தொடங்கியது. தா்கா முன் தொடங்கிய இந்த ஊா்வலம் தேவா் சிலை, பாலம் ஸ்டேஷன் சாலை, ஜம்புரோபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வலம் வந்து, திங்கள்கிழமை அதிகாலை கோரிப்பாளையம் தா்காவை மீண்டும் அடைந்தது.
இசை வாத்திய முழக்கங்களுடனும், இறை புகழ்ச்சிப் பாடல்களுடனும் நடைபெற்ற ஊா்வலத்தில் மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திரளானோா் பங்கேற்றனா். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை தா்கா நிா்வாக அறங்காவலா் தலைமையில், அறங்காவலா்கள், தா்கா ஹக்தாா்கள் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.