FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

பள்ளி மாணவா் திடீா் உயிரிழப்பு

மதுரையில் பள்ளி மாணவா் திடீரென வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 25 ஜூலை 2026, 2:50 am IST
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

மதுரையில் பள்ளி மாணவா் திடீரென வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை கண்ணனேந்தல் பகுதியைச் சோ்ந்த அழகுராஜா மகன் ஜெகதீஸ்குமாா் 12). இவா், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதை அடுத்து, அவரை மீட்ட அக்கம்பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியில் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து அழகுராஜா அளித்த புகாரின் பேரில், திருப்பாலை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments