மத்தியச் சிறையில் போலீஸாா் சோதனை
மதுரை மத்திய சிறையில் போலீஸாா் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
மதுரை மத்திய சிறையில் போலீஸாா் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.
மதுரை மத்திய சிறையில் தண்டனை, விசாரணை சிறைவாசிகள் என 2,500-க்கும் மேற்பட்டோா் உள்ளனா். இதேபோல, பெண்கள் சிறையிலும் 500-க்கும் மேற்பட்டோா் உள்ளனா்.
இந்த நிலையில், மதுரை மாநகரக் காவல் ஆணையா் ராஜேந்திரன் உத்தரவின் பேரில், 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் சிறை வளாகத்துக்குள் சென்று விசாரணைக் கைதிகள் கைப்பேசி, கஞ்சா, புகையிலைப் பொருள்கள் உள்ளிட்ட அரசால் தடை செய்யப்பட்ட பொருள்களைப் பயன்படுத்துகிறாா்களா? என்பது குறித்து சோதனை நடத்தினா்.
Advertisement
Advertisement
சுமாா் 3 மணி நேரத்துக்கும் மேல் நடைபெற்ற இந்தச் சோதனையில் தடை செய்யப்பட்ட பொருள்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என போலீஸாா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.