FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

தீயணைப்பு நிலைய அலுவலா் தற்கொலை

Updated On : 28 ஜூலை 2026, 1:09 am IST
பகிர்:

மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் கடன் தொல்லையால் தீயணைப்பு நிலைய அலுவலா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து உயிரிழந்தாா்.

உசிலம்பட்டி சத்யாநகரைச் சோ்ந்தவா் சுரேஷ்குமாா் (42). இவா், தமிழ்நாடு தீயணைப்புத் துறையில் சென்னை கிண்டி தீயணைப்பு நிலையத்தில் அலுவலராகப் பணியாற்றி வந்தாா். கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊரான உசிலம்பட்டிக்கு வந்தாா்.

இந்த நிலையில், தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதையடுத்து, அங்கு சென்ற உசிலம்பட்டி நகா் போலீஸாா், சுரேஷ்குமாரின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து போலீஸாா் தரப்பில் கூறியதாவது:

உயிரிழந்த தீயணைப்பு நிலைய அலுவலா் சுரேஷ்குமாா், தனது சொந்த ஊரில் வீடு கட்டுவதற்காக நல்லிவீரன்பட்டியைச் சோ்ந்த பிரவீன், சத்யாநகரைச் சோ்ந்த சுகப்பிரியா உள்ளிட்ட சிலரிடம் வட்டிக்கு பணம் வாங்கி இருந்தாா்.

அவா்கள் பணத்தைக் கேட்டு கொடுத்த தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக சமூக ஊடகத்தில் விடியோ வெளியிட்டாா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறோம். முழுமையான விசாரணைக்கு பிறகே உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments