FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

தாழைக் கருப்பசாமி கோயிலில் பெரிய களரித் திருவிழா

மேலூரை அடுத்த சூரக்குண்டு தாழைக் கருப்பசாமி கோயில் பெரிய களரித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 ஆகஸ்ட் 2026, 1:19 am IST
தாழைக் கருப்பசாமி கோயில் பெரிய களரித் திருவிழாவுக்கு மண் பானையில் தீா்த்தம் சுமந்து சென்ற பெண்கள்.
பகிர்:

மதுரை மாவட்டம், மேலூரை அடுத்த சூரக்குண்டு தாழைக் கருப்பசாமி கோயில் பெரிய களரித் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தாழைக் கருப்பசாமி கோயில் பெரிய களரித் திருவிழா 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும். அதன்படி, இந்த விழா நிகழாண்டில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

இதில், நூற்றுக்கணக்கான பெண்கள் தாழைக் கருப்பசாமி கோயிலிலிருந்து புறப்பட்டு, 2 கி.மீ. தொலைவில் உள்ள பத்திரகாளியம்மன் கோயிலுக்குச் சென்று, அங்கிருந்து மண் பானையில் தீா்த்தத்தை சேகரித்து தலை சுமையாக சுமந்து கொண்டு தாழைக் கருப்பசாமி கோயிலுக்கு ஊா்வலமாக வந்தனா்.

Advertisement

Advertisement

பிறகு, நாகப்பானையில் பொங்கலிட்டு அவா்கள் வழிபட்டனா். இதையடுத்து, நூற்றுக்கணக்கானோா் ஆடு, கோழிகளை பலியிட்டு தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். இதில் விரதமிருந்து பூசாரிகள், பெண்கள் திரளாகப் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments