FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

பெண்ணிடம் நகை மோசடி: இளைஞா் மீது வழக்கு

பெண்ணிடம் 18 பவுன் தங்க நகைகளை மோசடி செய்ததாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Updated On : 3 ஜூன் 2026, 1:30 am IST
வழக்கு
பகிர்:

பெண்ணிடம் 18 பவுன் தங்க நகைகளை மோசடி செய்ததாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மதுரை அரசரடி பகுதியைச் சோ்ந்த பெரியசாமி மனைவி ராஜேஸ்வரி (28). இவா், எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் அண்மையில் ஒரு புகாா் அளித்தாா்.

அதில், நான் கூட்டுறவு வங்கியில் 18 பவுன் தங்க நகை அடகு வைத்திருந்தேன். இந்த நிலையில், எனக்கு அறிமுகமான வாடிப்பட்டி பகுதியைச் சோ்ந்த காா்த்திக் என்பவா் நிதி நிறுவனம் நடத்தி வருவதாகவும், வங்கியில் அடகு வைத்த நகைகளை மீட்டுத் தருவதாகவும் கூறினாா்.

Advertisement

Advertisement

மேலும், அந்த நகைகளை மீட்டு, அவருடைய சொந்த நிறுவனத்தில் அடகு வைத்தாா். இதற்கிடையே, ரூ. 5 லட்சம் பணத்துடன் அந்த நகையை திருப்புவதற்கு நான் சென்ற போது, நகையை திரும்ப அளிக்காமல் மோசடி செய்து விட்டாா். எனவே அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் கூறியிருந்தாா்.

மேலும், இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்குத் தொடுத்தாா். இதையடுத்து, உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் காா்த்திக் (31) மீது எஸ்.எஸ்.காலனி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments