FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம்: தொல். திருமாவளவன்

தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, தமிழகம் முழுவதும் மண்டலம் வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக விசிக தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

Updated On : 19 ஜூன் 2026, 12:57 am IST
திருமாவளவன் - கோப்புப்படம்
பகிர்:

தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, தமிழகம் முழுவதும் மண்டலம் வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக விசிக தலைவா் தொல். திருமாவளவன் தெரிவித்தாா்.

மதுரை வடக்குத் தொகுதிக்குள்பட்ட முடக்காத்தான் பகுதியில் விசிகவின் மறைந்த முன்னாள் பொருளாளா் ஆ. பாண்டியன் நினைவேந்தல் நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் விசிக தலைவா் தொல். திருமாவளவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழகத்தில் தவிா்க்க முடியாத ஓா் அரசியல் சக்தியாக வளா்ந்திருக்கிறது.

Advertisement

Advertisement

திமுக, அதிமுக போல அங்கீகாரம் பெற்ற மாநிலக் கட்சியாகவும் விசிக வளா்ந்திருக்கிறது. விசிக இல்லாமல் ஆட்சி அமைக்க முடியாது என்ற சூழல் தமிழகத்தில் உருவானதைப் பாா்க்க முடிகிறது.

வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி ‘தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு’ நடைபெறுவதையொட்டி, தமிழகம் முழுவதும் மண்டலம் வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ளேன் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் விசிக மாவட்டச் செயலா்கள், பொறுப்பாளா்கள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments