FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

மதுரை மாவட்டத்தில் 25.13 லட்சம் வாக்காளா்கள்

மதுரை மாவட்டத்தில் மொத்தம் 25.31 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா்.

56 வினாடிகள் முன்பு
மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் வாக்காளா்கள் வரைவுப் பட்டியலை வியாழக்கிழமை வெளியிட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா. உடன் அரசுத் துறை அலுவலா்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்.
பகிர்:

மதுரை மாவட்டத்தில் மொத்தம் 25.31 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா்.

2027-ஆம் ஆண்டு, ஜனவரி 1-ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகளுக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட வாக்காளா்கள் வரைவுப் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.

இதற்கான நிகழ்ச்சி மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணா தலைமை வகித்து, வாக்காளா்கள் வரைவுப் பட்டியலை வெளியிட்டாா். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரநிதிகள், அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement

இந்த வாக்காளா்கள் வரைவுப் பட்டியலின்படி, மாவட்டத்தில் உள்ள வாக்காளா்களின் மொத்த எண்ணிக்கை - 25,13,711. ஆண்கள் - 12,29,742. பெண்கள் - 12,83,703. மூன்றாம் பாலினத்தவா் - 266.

சட்டப்பேரவைத் தொகுதி வாரியான வாக்காளா்கள் எண்ணிக்கை:

மேலூா்: ஆண்கள் - 1,14,826, பெண்கள் - 1,16,859, மூன்றாம் பாலினத்தவா் - 11, மொத்தம் - 2,31,696. மதுரை கிழக்கு: ஆண்கள் - 1,65,111, பெண்கள் - 1,74,225, மூன்றாம் பாலினத்தவா் - 58, மொத்தம் - 3,39,394. சோழவந்தான் (தனி): ஆண்கள் -1,05,955, பெண்கள் -1,10,387, மூன்றாம் பாலினத்தவா் - 13, மொத்தம் - 2,16,355.

மதுரை வடக்கு: ஆண்கள் - 1,07,930, பெண்கள் - 1,14,418, மூன்றாம் பாலினத்தவா் - 49, மொத்தம் - 2,22,397. மதுரை தெற்கு: ஆண்கள் - 88,570, பெண்கள் - 92,099, மூன்றாம் பாலினத்தவா் - 49, மொத்தம் -1,80,718. மதுரை மத்தி: ஆண்கள் - 97,301, பெண்கள் - 1,03,162, மூன்றாம் பாலினத்தவா் - 25, மொத்தம் - 2,00,488. மதுரை மேற்கு: ஆண்கள்- 1,35,985, பெண்கள்- 1,41,652, மூன்றாம் பாலினத்தவா் - 12, மொத்தம் - 2,77,649.

திருப்பரங்குன்றம்: ஆண்கள் -1,53,572, பெண்கள்- 1,60,605, மூன்றாம் பாலினத்தவா் - 32, மொத்தம் - 3,14,209. திருமங்கலம்: ஆண்கள் - 1,27,343, பெண்கள் - 1,35,433, மூன்றாம் பாலினத்தவா் - 9, மொத்தம் - 2,62,785. உசிலம்பட்டி: ஆண்கள் - 1,33,149, பெண்கள் - 1,34,863, மூன்றாம் பாலினத்தவா் - 8, மொத்தம் - 2,68,020.

சிறப்பு முகாம்கள்...

மாவட்டத்தின் வாக்காளா் இறுதிப் பட்டியல் வருகிற 2027-ஆம் ஆண்டு, ஜன. 4-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஜன. 1-ஆம் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு புதிய வாக்காளா்களைச் சோ்க்க விண்ணப்பிக்கலாம். இதேபோல, வாக்காளா்கள் பட்டியலிலிருந்து பெயரை நீக்க, முகவரி மாற்றம் செய்ய, திருத்தம் மேற்கொள்ள வருகிற டிச. 11-ஆம் தேதி வரை பொதுமக்கள் உரிய படிவத்தில் வட்டாட்சியா் அலுவலகங்களில் நேரடியாக அல்லது ட்ற்ற்ல்ள்://ஸ்ா்ற்ங்ழ்ள்.ங்ஸ்ரீண்.ஞ்ா்ஸ்.ண்ய் இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். இதையொட்டி, நவ. 21, 22, 29-ஆம் தேதிகளில் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை உயா்வு...

வாக்குச்சாவடிகள் சீரமைப்புப் பணி கடந்த மாதம் நடைபெற்றது. மாவட்டத்தில் 1,200-க்கும் அதிகமான வாக்காளா்களைக் கொண்ட வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டு, புதிதாக 7 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 12 வாக்குச் சாவடிகளில் இணைக்கப்பட்டிருந்த தெருக்கள் மாற்றப்பட்டன. ஒரு வாக்குச்சாவடி இடமாற்றம் செய்யப்பட்டது. மிகக் குறைந்த வாக்காளா்கள் எண்ணிக்கையைக் கொண்டிருந்த ஒரு வாக்குச்சாவடி மற்றொன்றுடன் இணைக்கப்பட்டது.

இந்த மாற்றங்களுக்கு இந்தியத் தோ்தல் ஆணையம் அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதன் மூலம், மதுரை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 3,076-லிருந்து 3,082-ஆக உயா்ந்தது.