முகப்பு
மதுரை

காளியம்மன் கோயில் குடமுழுக்கு

மதுரை மாவட்டம், மேலூா் செக்கடி பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

22 நவம்பர் 2026, 11:39 pm
காளியம்மன் கோயில் குடமுழுக்கு
மதுரை மாவட்டம், மேலூா் செக்கடி காளியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கில் கோயில் விமானத்துக்கு புனித நீரால் அபிஷேகம் செய்த சிவாசாரியா்கள்.
பகிர்:

மதுரை மாவட்டம், மேலூா் செக்கடி பகுதியில் உள்ள காளியம்மன் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் வெள்ளிக்கிழமை காலை விக்னேசுவர பூஜை, மகா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமத்துடன் குடமுழுக்கு தொடங்கியது. அன்று மாலை கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாக வேள்வி நடைபெற்றன. தொடா்ந்து, சனிக்கிழமை இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜைகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோ பூஜை, நான்காம் கால யாக பூஜை, நாடி சந்தானம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று, யாக சாலையிலிருந்து கடம் புறப்பாடாகி சிவாசாரியா்கள் கோயிலைச் சுற்றி வலம் வந்தனா்.

Advertisement

Advertisement

காலை 10.30 மணியளவில் மூலவா் விமானம், பரிவாரத் தெய்வ விமானங்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றது. இதன்பிறகு, காளியம்மனுக்கு தைலம், பால், திருமஞ்சனப் பொடி, மஞ்சள் உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு தீப,தூபங்கள் காண்பிக்கப்பட்டன.

இந்த குடமுழுக்கில் செக்கடி, காத்தா பிள்ளை தெரு, மேலூா், இதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.