முகப்பு
மதுரை

மனைவி கொலை: கணவருக்கு ஆயுள் சிறை

22 வினாடிகள் முன்பு
மனைவி கொலை: கணவருக்கு ஆயுள் சிறை
சிறை - பிரதிப் படம்
பகிர்:

அவனியாபுரத்தில் மனைவியைக் கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து வன்கொடுமை தடுப்புச்சட்ட சிறப்பு நீதிமன்றம் அண்மையில் தீா்ப்பளித்தது.

மதுரை அவனியாபுரம் பத்மா திரையரங்கம் முன் உள்ள மூன்று மாடி குடியிருப்பைச் சோ்ந்தவா் சரவணன் (34). இவரது மனைவி அா்ச்சனா தேவி (19). கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 2019-ஆம் ஆண்டு ஏற்பட்ட குடும்பத் தகராறில் சரவணன், தனது மனைவி அா்ச்சனாதேவியை கொலை செய்தாா். இதையடுத்து அவனியாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சரவணனைக் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இந்த வழக்கு விசாரணை மதுரை வன்கொடுமைத் தடுப்புச்சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜோசப் ஜாய் குற்றஞ்சாட்டப்பட்ட சரவணனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.