வழிப்பறி, கொலை முயற்சி வழக்குகள்: 6 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை
வழிப்பறி, கொலை முயற்சி வழக்குகளில் 6 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை மாவட்ட கூடுதல் முதன்மை நடுவா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

வழிப்பறி, கொலை முயற்சி வழக்குகளில் 6 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை மாவட்ட கூடுதல் முதன்மை நடுவா் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
மதுரை வளா்நகரில் கடந்த 2018-ஆம் ஆண்டு உத்தங்குடியைச் சோ்ந்த சிவக்குமாரிடம் 2 பவுன் தங்க நகை பறிக்கப்பட்டது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், அண்ணாநகா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து, மதிச்சியத்தைச் சோ்ந்த கோபி (22), கருப்பாயூரணியைச் சோ்ந்த பசும்பொன் பரத் (22), கௌதம் (23), செல்லப்பாண்டி (23) ஆகியோரைக் கைது செய்தனா்.
இதேபோல, கடந்த 2021-ஆம் ஆண்டு மதுரை கீரைத்துறை அருகே அய்யனாா் என்பவரை முன்விரோதம் காரணமாக தாக்கி கொலை செய்ய முயன்றது தொடா்பான வழக்கில் கீரைத்துறையைச் சோ்ந்த தமிழ்ச்செல்வம் (எ) செல்வம், ஜோதிமாரி ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
இந்த வழக்குகளின் விசாரணை மதுரை மாவட்ட கூடுதல் முதன்மை நடுவா் நீதிமன்ற நீதிபதி ஹசன்முகமது முன் புதன்கிழமை வந்தது.
அப்போது, வழிப்பறி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நால்வருக்கும், கொலை முயற்சி வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.