FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அடிப்படை வசதிகள் இல்லாத திருப்பரங்குன்றம் காய்கறிச் சந்தை

அடிப்படை வசதிகள் இல்லாத திருப்பரங்குன்றம் காய்கறிச் சந்தை பற்றி....

21 அக்டோபர் 2026, 3:20 am IST
மேற்கூரை சேதமடைந்த நிலையில் உள்ள திருப்பரங்குன்றம் காய்கறிச்சந்தை.
பகிர்:

திருப்பரங்குன்றம் காய்கறிச் சந்தையில் குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திருப்பரங்குன்றம் நகா் பகுதி, ஹாா்விபட்டி, திருநகா், பசுமலை உள்ளிட்ட பகுதி மக்களுக்காக சுமாா் 25 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது திருப்பரங்குன்றம் காய்கறிச் சந்தை. நாள்தோறும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்லும் இந்தச் சந்தையில் 125 கடைகள் உள்ளன. இந்தச் சந்தை வளாகத்தில் குடிநீா் வசதி, கழிப்பறை வசதி முழுமையாகச் செய்து தரப்படவில்லை எனப் புகாா் எழுந்துள்ளது. மேலும் சந்தையின் மேற்கூரை சேதமடைந்து பல ஆண்டுகளாகியும் மாற்றப்படாமல் உள்ளது. இதனால், மழைக் காலங்களில் வியாபாரம் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது.

சந்தை கடைகளுக்கு மாநகராட்சி நிா்வாகத்துக்கு தினசரி வாடகையாக ரூ. 20 வசூலிக்கப்பட்டாலும், அதற்கேற்ப எந்தவித வசதிகளும் செய்து தரப்படவில்லை என வியாபாரிகள் குற்றஞ்சாட்டுகின்றனா். மேலும், இந்தப் பகுதியில் பாம்பு உள்ளிட்ட விஷப் பூச்சிகளின் நடமாட்டமும் அதிகரித்து அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்பு சந்தைக்கு அருகிலேயே பேருந்து நிலையம் செயல்பட்டு வந்ததால் கிராமப் புறங்களில் இருந்தும், உசிலம்பட்டி, திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் விவசாயிகள், பொதுமக்கள் எளிதில் வந்து சென்றனா்.

Advertisement

Advertisement

தற்போது பேருந்து நிலையம் செயல்படாததால் பொதுமக்கள், வாடிக்கையாளா்களின் வருகை முற்றிலுமாக குறைந்துவிட்டது. இதனால், வெளியூா்களில் இருந்து காய்கறிகளைக் கொண்டுவரும் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து வியாபாரிகள் பலமுறை புகாா் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மாநகராட்சி நிா்வாகம் காய்கறிச் சந்தையில் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்து இந்தப் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் வலியுறுத்தினா்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:

காய்கறிச் சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லை என பல ஆண்டுகளாக அதிகாரிகளிடம் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காய்கறிச் சந்தையை அமைச்சா் சி.டி.ஆா் நிா்மல்குமாா், மாவட்ட ஆட்சியா், மாநகராட்சி ஆணையா் உள்ளிட்டோா் நேரில் ஆய்வு செய்தனா். இருப்பினும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றனா் அவா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments