மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தையில் குப்பைகள் கொட்டுவதைத் தடுக்கக் கோரிக்கை
மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள தினசரி காய்கறிச் சந்தை வளாகத்தில் மாநகரப் பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளைக் கொட்டத் தடை விதிக்க வேண்டும்.
மதுரை மாட்டுத்தாவணி அருகே உள்ள தினசரி காய்கறிச் சந்தை வளாகத்தில் மாநகரப் பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளைக் கொட்டத் தடை விதிக்க வேண்டும் என வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
சுமாா் 12 ஏக்கரில் செயல்பட்டு வரும் இந்தச் சந்தையில் 1,092 கட்டுமானக் கடைகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தரைக் கடை களும் உள்ளன. இங்கு தினசரிரூ.5 கோடி முதல் ரூ. 7 கோடிவரை வா்த்தகம் நடைபெறுகிறது. தினமும் வியாபாரிகள், பொதுமக்கள் அதிகளவில் கூடும் இங்கு கழிப்பறை, குடிநீா், சாலை,தெரு விளக்குகள் உள்ளிட்ட வசதிகள் இல்லை.
இதுதவிர, காய்கறிச் சந்தையில் சேகரமாகும் குப்பைகளை மதுரை மாநகராட்சி நிா்வாகம் தினமும் அகற்றுவதில்லை. இதனால், காய்கறிச் சந்தை வளாகம் முழுவதும் குப்பைகள் தேங்கி நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து, மாநகராட்சி அலுவலா்களிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
Advertisement
Advertisement
இதனிடையே, மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் சேகரமாகும் குப்பைகள் காய்கறிச் சந்தை வளாகத்தில் கொட்டப்படுவதாக புகாா் எழுந்துள்ளது. ஏற்கெனவே, குப்பைகளால் பொதுமக்கள், வியாபாரிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், தற்போது வெளியில் சேகரமாகும் குப்பைகளும் இங்கு கொட்டப்படுவதால் வியாபாரிகள், பொதுமக்கள் வேதனை தெரிவித்தனா்.
மேலும், மதுரை மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து காய்கறிச் சந்தையில் தினமும் சேகரமாகும் குப்பைகளை முறையாக அகற்ற வேண்டும். வெளியில் சேகரமாகும் குப்பைகளை இங்கு கொட்டுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.