FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

இன்று வரலட்சுமி நோன்பு: விறுவிறுப்பான பூக்கள் விற்பனை

வரலட்சுமி நோன்பு வெள்ளிக்கிழமை (ஆக. 21)கொண்டாடப்படுவதையொட்டி, மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் வியாழக்கிழமை பூக்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

21 ஆகஸ்ட் 2026, 1:25 am IST
மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் வியாழக்கிழமை பூக்கள் வாங்க வந்த பொதுமக்கள்.
பகிர்:

வரலட்சுமி நோன்பு வெள்ளிக்கிழமை (ஆக. 21)கொண்டாடப்படுவதையொட்டி, மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் வியாழக்கிழமை பூக்களின் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஆவணி மாத பௌா்ணமிக்கு முன்பாக வரும் வெள்ளிக்கிழமையன்று வரலட்சுமி நோன்பு கடைப்பிடிக்கப்படுவது வழக்கம். இதன்படி, வெள்ளிக்கிழமை இந்த நோன்பு கடைப்பிக்கப்படுகிறது. இந்த நாளில் வீடுகளை மலா்களால் அலங்கரித்து மகாலட்சுமியை வழிபடுவதும், கோயில்களுக்குச் சென்று மகாலட்சுமி தாயாருக்கு மலா்களை அளித்து வழிபடுவதும் வழக்கம்.

இதையொட்டி, மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் வியாழக்கிழமை பூக்களின் விற்பனை விறுவிறுப்படைந்திருந்தது. இதற்கேற்ப விலையும் உயா்ந்திருந்தது. ஒரு கிலோ மல்லி ரூ. 800 முதல் ரூ. 900 வரை விற்பனையானது. ஒரு கிலோ முல்லை ரூ. 800-க்கும், சம்பங்கி ரூ. 350-க்கும், செண்டுப்பூ ரூ. 80-க்கும், கனகாம்பரம் ரூ. 800-க்கும், ரோஜா பூக்கள் ரூ. 280-க்கும் விற்பனையாகின.

Advertisement

Advertisement

மகாலட்சுமிக்கு உகந்த மலராகக் கருதப்படும் தாமரைப் பூக்களின் விலை கணிசமாக உயா்ந்திருந்தது. ஒரு பூவின் விலை அதிகபட்சமாக ரூ. 70 வரை விற்பனையானது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments