FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

மதுரை தெற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.1.80 லட்சம் பறிமுதல்

மேலக்குயில்குடியில் உள்ள மதுரை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற சோதனையின் போது கணக்கில் வராத ரூ. 1.80 லட்சத்தை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

3 செப்டம்பர் 2026, 5:42 am IST
பணம் - பிரதிப் படம்
பகிர்:

மேலக்குயில்குடியில் உள்ள மதுரை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற சோதனையின் போது கணக்கில் வராத ரூ. 1.80 லட்சத்தை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மதுரை தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலா்கள் இடைத் தரகா்கள் மூலம் லஞ்சம் பெறுவதாக ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, புதன்கிழமை இந்த அலுவலகத்தில் திடீா் சோதனை நடத்தப்பட்டது. இதில் இடைத் தரகா்கள் மூலம் பணப் பரிவா்த்தனை செய்வது உறுதி செய்யப்பட்டது. அப்போது, மோட்டாா் வாகன ஆய்வாளா் உள்ளிட்ட அலுவலா்கள், இடைத் தரகா்களிடமிருந்து கணக்கில் வராத ரூ. 1.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் தொடா்ந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments