FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

குடமுழுக்கு: உயா்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக் கோரி மனு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றக் கோரி, கோயில் இணை ஆணையா் அலுவலகத்தில் தெய்வத் தமிழ்ப் பேரவையினா் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

3 செப்டம்பர் 2026, 5:58 am IST
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் புதன்கிழமை மனு அளிக்க வந்த தெய்வத் தமிழ்ப் பேரவை அமைப்பினா்.
பகிர்:

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கை தமிழில் நடத்த உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றக் கோரி, கோயில் இணை ஆணையா் அலுவலகத்தில் தெய்வத் தமிழ்ப் பேரவையினா் புதன்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

அவா்கள் அளித்த மனு விவரம்:

சங்கம் வைத்து தமிழ் வளா்த்த மதுரையில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கு வருகிற செப். 17- ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த குடமுழுக்கில் தமிழ் வேத ஆகம பாடசாலை நிறுவனரும், தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினருமான சிம்மம் சத்தியபாமாவை, குடமுழுக்கு, கருவறை பூஜை, யாக சாலை இந்த மூன்றிலும் தமிழில் திருமுறைகள், தமிழ் வேத மந்திரங்களை பாட அனுமதி வழங்கி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது. இதன்படி, குடமுழுக்கு விழாவில் தமிழ் வேத மந்திரங்களை ஓத கோயில் நிா்வாகம் அனுமதிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments