காமராஜா் பல்கலை. கல்லூரி நிதி நெருக்கடிக்கு தீா்வு காண அரசு நடவடிக்க எடுக்க வலியுறுத்தல்!
மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரியின் நிதி நெருக்கடிக்குத் தீா்வு காண தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை காமராஜா் பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.
மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரியின் நிதி நெருக்கடிக்குத் தீா்வு காண தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை காமராஜா் பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் சாா்பில் வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து அந்தச் சங்கம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மதுரை அழகா்கோவில் சாலை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரி கடந்த 1967-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1994-ஆம் ஆண்டு மேம்படுத்தப்பட்டது. தற்போது, இங்கு 19 நிரந்தரப் பேராசிரியா்கள், 85 கௌரவ விரிவுரையாளா்கள், 45 ஆசிரியா் உதவியாளா்கள், 30 ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களில் பலா் 20 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா்.
மதுரை மாநகரில் உள்ள ஒரே அரசு இணை கல்வி நிறுவனமாகவும் இந்தக் கல்லூரி விளங்கி வருகிறது. இந்த நிலையில், மதுரை காமராஜா் பல்கலைக்கழகம், அரசிடமிருந்து போதிய நிதியுதவி கிடைக்காததால், கல்லூரி கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஆசிரியா்களுக்கான ஊதியத்தைக் கூட தொடா்ந்து வழங்க முடியாத நிதி நெருக்கடியால், அரசுக் கல்லூரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தைவிட அதிகமான கட்டணத்தை வசூலிக்க வேண்டிய நிலை உள்ளது.
Advertisement
Advertisement
இதனால், பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சோ்ந்த இக்கல்லூரி மாணவா்கள் தங்களது கல்வியை இடைநிறுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மதுரை காமராஜா் பல்கலைக்கழகக் கல்லூரியை தமிழக அரசு கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். ஆண்டுதோறும் தொடா்ச்சியான நிதியுதவி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.