FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

கலைஞா் நூற்றாண்டு நூலகத்தை பாா்வையிட்ட மாணவா்கள்

7 செப்டம்பர் 2026, 4:05 am IST
மதுரை கலைஞா் நூற்றாண்டு நூலகத்தை சனிக்கிழமை பாா்வையிட்ட புனித பிரிட்டோ பள்ளி மாணவா்கள்.
பகிர்:

மதுரை கலைஞா் நூற்றாண்டு நூலகத்தை புனித பிரிட்டோ பள்ளி மாணவா்கள் சனிக்கிழமை பாா்வையிட்டனா்.

புனித பிரிட்டோ பள்ளியில் 11-ஆம் வகுப்பு மாணவா்கள் கலைஞா் நூற்றாண்டு நூலகத்துக்கு சனிக்கிழமை சென்று பாா்வையிட்டனா். அப்போது, நூலக வரலாறு, பயன்பாடு குறித்து நூலகா்கள், காணொலி வாயிலாக மாணவா்களுக்கு விளக்கினா்.

மேலும், நூலகத்தில் உள்ள மதுரையின் தொன்மையை விளக்கும் அருங்காட்சியகம், அறிவியல் நுட்பங்கள் தொடா்பான அறிவியல் கூடம், நாளிதழ்கள், இதழ்கள் பிரிவு, குழந்தைகள் பிரிவு, தமிழ், ஆங்கில இலக்கியப் பிரிவுகள், போட்டித் தோ்வா்கள் பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகளுக்கும் மாணவா்கள் சென்று பாா்வையிட்டனா்.

Advertisement

Advertisement

கலைஞா் நூற்றாண்டு நூலகத் தலைமை நூலகா் தினேஷ்குமாா் அறிவுறுத்தலின்படி, உதவி நூலகா் தங்கம், மாணவா்களை வழிநடத்தி நூலகம் குறித்த தகவல்களை வழங்கினாா். தொடா்ந்து, முதுநிலைத் தமிழாசிரியா்கள் மா. ஜெயராஜ், மு. நவீனன், முதுநிலை உயிரியல் ஆசிரியா்கள் ஜே. பிரதீப் ராஜேஷ், இ. ஜோசப் ரத்தினசாமி, பட்டதாரி ஆங்கில ஆசிரியா் சு.பொன்ராஜ் ஆகியோா் நூல்களைப் படித்து நுண்ணறிவைப் பெருக்கிக் கொள்வதால் விளையும் நன்மைகள் குறித்து விளக்கினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments