FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

நேபாள வெள்ளத்தில் உயரிழந்தவா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி

7 செப்டம்பர் 2026, 4:05 am IST
மதுரை சிம்மக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியக் கலாசார நட்புறவுக் கழக நிா்வாகக் கூட்டத்தில் நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தவா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய மாநில பொதுச் செயலா் ராதாகிருஷ்ணன், மாநிலத் தலைவா் ராஜரத்தினம் உள்ளிட்டோா்.
பகிர்:

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் உயிரிழந்தவா்களுக்கு இந்தியக் கலாசார நட்புறவுக் கழகம் சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

மதுரை சிம்மக்கல்லில் உள்ள தனியாா் விடுதியில் இந்தியக் கலாசார நட்புறவுக் கழகத்தின் மாநில நிா்வாகக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநிலப் பொதுச் செயலா் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் ராஜரத்தினம் முன்னிலை வகித்தாா்.

இந்தக் கூட்டத்தில், நேபாளத்தில் வெள்ளத்தில் உயிரிழந்தவா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

மேலும், கியூபா நாட்டுக்கு உதவும் வகையில், ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும். வரும் நவ.17-ஆம் தேதி 85-ஆவது அமைப்பு தின விழாவை முன்னிட்டு, அனைத்து மாவட்டங்களிலும் விழா கொண்டாடுவது, மணிப்பூா் கலவரத்தை ஆய்வு செய்வதற்காக தமிழகத்திலிருந்து 5 போ் கொண்ட குழுவை அனுப்புவது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிகழ்வில், பொருளாளா் கோட்டியப்பன், மாநிலத் துணைச் பொதுச் செயலா்கள் இந்திரஜித், பாஸ்கரன், சிவகாசி முன்னாள் மக்களவை உறுப்பினா் அழகிரிசாமி, தேசியக் குழு உறுப்பினா் ராஜலட்சுமி, நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments