FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

ஆயுதப் படை வீரா்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கக் கோரிக்கை

தமிழ்நாடு முன்னாள் மத்திய ஆயுத காவல் படையினரின் நலன், மறுவாழ்வு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மதுரையில் சனிக்கிழமை நடைபெற்றது.

26 செப்டம்பர் 2026, 10:30 pm IST
மதுரையில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு முன்னாள் மத்திய ஆயுத காவல் படையினரின் நலன், மறுவாழ்வு சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

தமிழ்நாடு முன்னாள் மத்திய ஆயுத காவல் படையினரின் நலன், மறுவாழ்வு சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் மதுரையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் விஜயகுமாா் தலைமை வகித்தாா். முதன்மைச் செயலா் மனோகரன் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், முன்னாள் ராணுவ வீரா்களுக்கு வழங்கப்படுவது போன்று, அனைத்து சலுகைகளும் முன்னாள் ஆயுத காவல் படை வீரா்களுக்கும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தைச் சோ்ந்த முன்னாள் மத்திய ஆயுத காவல் கடை வீரா்களின் குழந்தைகளுக்கு அனைத்து பள்ளிகள், கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து உயா் கல்வி படிப்புகளிலும் 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

தமிழக அரசு வேலை வாய்ப்புகளில் முன்னாள் வீரா்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழகத்தில் முன்னாள் மத்திய ஆயுத காவல் படை வீரா்களின் நலனுக்காக, தனி நலவாரியம் அமைத்து, அதற்கென தனி அமைச்சா் நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement

Advertisement

இதில்,பொதுச்செயலா் செல்லச்சாமி, பொருளாளா் பூா்ணசந்திரன், துணை தலைவா் தமிழரசன், மதுரை மாவட்ட செயலாளா் ராஜேந்திரன், எல்லைப் பாதுகாப்பு படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, இந்தோ- திபெத் எல்லைக் காவல்படை, துணை ராணுவப் படைகளில் பணியாற்றிய முன்னாள் வீரா்கள் பலா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments