FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

செயலி மூலம் தகவல் திருடி இளம்பெண்களை மிரட்டிய இளைஞர் கைது

ராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினத்தில் செல்லிடப்பேசி செயலி மூலம் தகவல்களை திருடி, இளம்பெண்களை மிரட்டிய இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

Updated On : 2 ஆகஸ்ட் 2018, 6:08 am IST
பகிர்:

ராமநாதபுரம் அருகே உள்ள தேவிபட்டினத்தில் செல்லிடப்பேசி செயலி மூலம் தகவல்களை திருடி, இளம்பெண்களை மிரட்டிய இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
 ராமநாதபுரம்  மாவட்டம்  தேவிபட்டினம்  அருகே  தாமரையூரணி  கிராமத்தைச்  சேர்ந்தவர் தினேஷ்குமார் (24). இவர், தனது உறவுக்கார இளம் பெண்களிடம்  அவர்களது செல்லிடப்பேசியில் செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்து கொடுத்து, அதன் மூலம் அவர்களது அந்தரங்க விவரங்களை தெரிந்து கொண்டு அவற்றை முகநூலில் பதிவிடப் போவதாக மிரட்டினாராம். இதே போல 5-க்கும் மேற்பட்ட பெண்களை தினேஷ்குமார் மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து தாமரையூரணி  கிராமத்தைச்  சேர்ந்த சக்தி மனைவி  ராதா (30), அளித்த புகாரின் பேரில் தேவிபட்டினம் காவல் ஆய்வாளர் முத்து பிரேம்சந்த் வழக்குப்பதிந்து தினேஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments