FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திருவாடானையில் மதுக்குட ஊர்வலம்

திருவாடானையில் மாகாலிங்கமூர்த்தி கோயில் ஆடித் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை பக்தர்கள் மதுக்குடம் ஏந்தி ஊர்வலமாகச் சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர்.

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:

திருவாடானையில் மாகாலிங்கமூர்த்தி கோயில் ஆடித் திருவிழாவில் செவ்வாய்க்கிழமை பக்தர்கள் மதுக்குடம் ஏந்தி ஊர்வலமாகச் சென்று நேர்த்திக் கடன் செலுத்தினர்.
திருவாடானையில் மணிமுத்தாறு ஆற்றங்கரையில் அமைந்துள்ள இக்கோயிலில் கடந்த 3 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. இதில்,  5 ஆம் நாள் நாள் நிகழ்வாக செவ்வாய்க்கிழமை  பக்தர்கள் மதுக்குடம் ஏந்தி வீதி உலா வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 10 ஆம் தேதி பூக்குழி திருவிழா நடைபெறும். இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்வார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments