இரு தரப்பினரிடையே மோதல்: 2 பேர் காயம்; 13 பேர் மீது வழக்கு
முதுகுளத்தூர் அருகே வீரம்பல் கிராமத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் காயமடைந்தனர். இதில் 13பேர் மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிவு செய்தனர்.
முதுகுளத்தூர் அருகே வீரம்பல் கிராமத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் காயமடைந்தனர். இதில் 13பேர் மீது போலீஸார் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிவு செய்தனர்.
முதுகுளத்தூர் அருகே வீரம்பல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான் மகன் ஆமோஸ்(40) . அதே ஊரைச் சேர்ந்தவர் அருள்ராஜ் மகன் ஜான்சன். இரு தரப்பினருக்கும் குடும்ப பிரச்னை காரணமாக முன் விரோதம் காணப்பட்டது.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை ஆமோஸ் வீரம்பல் பேருந்து நிறுத்ததில் நின்று கொண்டிருந்தார். அப்போது ஜான்சனும், அவரது உறவினர்களும் சேர்ந்து வந்து ஆமோஸை தாக்கினர். இதில் இரு தரப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் ஆமோஸ், ஜான்சன் ஆகிய இருவரும் காயமடைந்தனர்.
அவர்கள் இருவரையும் மீட்டு முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, பின் மேல்சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து இளஞ்செம்பூர் போலீஸார் இரு தரப்பிலும் 13 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.