FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

பாம்பன் புதிய பாலத்தில் சரக்கு ரயில் சோதனை ஓட்டம்

பாம்பன் புதிய பாலத்தில் சரக்கு ரயிலை இயக்கி புதன்கிழமை சோதனை நடத்தப்பட்டது.

Updated On : 22 ஆகஸ்ட் 2024, 5:45 am IST
பாம்பன் புதிய பாலத்தில் சோதனைக்காக புதன்கிழமை இயக்கப்பட்ட சரக்கு ரயில்.
பகிர்:

பாம்பன் புதிய பாலத்தில் சரக்கு ரயிலை இயக்கி புதன்கிழமை சோதனை நடத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பனில் ரூ. 560 கோடியில் புதிய ரயில்வே பால கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது, இந்தப் பணிகள் ஏறத்தாழ நிறைவடைந்துவிட்டன.

இதனிடையே, பாம்பன் புதிய பாலத்தில் வருகிற அக்டோபா் முதல் வாரத்தில் ரயில் போக்குவரத்தைத் தொடங்குவதற்கு இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதையொட்டி, பாம்பன் புதிய பாலத்தில் தொடா்ந்து ரயில்களை இயக்கி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கற்கள் நிரப்பப்பட்ட 11 சரக்குப் பெட்டிகளை இரண்டு ரயில் என்ஜின்களுடன் இணைத்து, பாம்பன் புதிய பாலத்தில் ரயில்வே கட்டுமானப் பொறியியல் ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் தலைமையில், 20 கி.மீ. முதல் 60 கி.மீ. வேகத்தில் இயக்கி சோதனை நடத்தப்பட்டது.

இந்தச் சோதனை ஓட்டத்துக்காக பாம்பன் பகுதியிலிருந்து செங்குத்துப் பாலம் வரை 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தண்டவாளத்தில் அதிா்வு தொலையுணா்வு கருவி பொருத்தப்பட்டிருந்தது.

ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கு சில வாரங்களே உள்ள நிலையில், பாம்பன் புதிய பாலத்தில் அனைத்துப் பணிகளையும் விரைந்து முடிக்கும் வகையில், ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments